ஈரான் தூதுக்குழுவினரின் இஸ்லாமாபாத்துக்கு பயணம் தாமதம்
Meiveli Media Team

ஈரான் தூதுக்குழுவினர், இஸ்லாமாபாத்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான 2ஆம் சுற்று அமைதி பேச்சுக்காக ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது என தகவல் வெளியான நிலையிலேயே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்த முடியாது என்பதில் ஈரான் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, அமைதி பேச்சுக்காக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் செல்வார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

