புனித அந்தோனியார் திருத்தலம், கொட்டாஞ்சேனை.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

புனித அந்தோனியார் திருத்தலம், கொட்டாஞ்சேனை.
(முற்பகல்)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நினைவேந்தல் நிகழ்விற்கான ஆயத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேவாலயத்திற்கு முன்பாக விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று முற்பகல் 8.40 மணிக்கு ஆரம்பமாகியது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்.
(இரண்டாம் பாகம்)
கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கர்தினால் ஆண்டகை அவர்களின் வருகையைத் தொடர்ந்து, பிரதான நினைவேந்தல் நிகழ்வு முற்பகல் 8.45 மணிக்கு நடைபெற்றது.

நினைவுச் சின்னத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர்.

*கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் திருத்தலத்தின் உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்…*
(பாகம் 3)
*மத வழிபாடுகளும் மதத் தலைவர்களின் உரைகளும்…*
1. *கலாநிதி ஓமல்பே சோபித தேரர்.*
2. *கண்ணன் குருக்கள்.*
(பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில்)
3. *மசூத் மௌலவி.

*கர்தினால் ஆண்டகையின் உரை…*
*அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உயிர்த்த ஞாயிறு நினைவேந்தலில் ஆற்றிய உரை:*
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலானது ஒரு திட்டமிட்டச் செயலா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எந்தளவுக்கு உண்மையானவை என்பதும் கண்டறியப்பட வேண்டும்.
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் இணையாக அந்த காலப்பகுதியில் மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
* சில நபர்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரிவினர் முயற்சித்தனர்.
* இந்த விடயம் தொடர்பில் அரச புலனாய்வுச் சேவை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பல சிக்கல்கள் உள்ளன.
* பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பிலும் பிரச்சினை காணப்படுகிறது.
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.
* இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள சக்திகள் யார் என்பதைக் கண்டறிவது எமது அடிப்படை உரிமையாகும்.
* நாட்டிலுள்ள அனைவருக்கும் நீதி சரியாக நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கு முன்னர் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இது தொடர்பில் சரியாகச் செயற்படாமல், தமக்கு சாதகமான விசாரணைகளையே முன்னெடுத்தன.
* தற்போதைய அரசாங்கம் விசாரணைகள் தொடர்பில் ஒரு சாதகமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
* உயர்மட்ட அதிகாரிகளின் தகவல்களும் தற்போது வௌிப்படுத்தப்பட்டு வருகின்றன.
* தவறு செய்த எவராயினும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* எவராயினும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும்.
* ‘ரணவிரு’ (யுத்த வீரர்) என்ற முத்திரைக்கு பின்னால் ஒளிய முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
* உண்மை மறைக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.



