யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆவணப்படுத்தல்
Sathees Navaratnam

2024 ஆம் ஆண்டு நூலக நிறுவனம் மூலம் கல்லூரியின் பழைய மாணவிகளான சிவகாமி அம்பலவாணர் அம்மையார், அபிராமி கைலாசபிள்ளை அம்மையார் ஆகியோரின் முழு அனுசரணையுடன் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இச்செயற்றிட்டத்தின் கீழ் 81 சிறப்பு மலர்கள், 22 அறிக்கைகள், 34 கழகங்கள், மன்றங்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் பற்றிய தொகுப்பு, 39 பாடசாலை சார்ந்த ஆளுமைக் குறிப்புகள், 26 வாய்மொழி வரலாறுகள், பாடசாலை சார்ந்த ஏனைய இணைய இணைப்புகள், 107 ஒளிப்படங்கள் மற்றும் 53 குறுங்கால ஆவணங்கள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டு செயற்றிட்ட முகப்பின் கீழ் அனைவரும் இலவச அணுக்கத்தில் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 08.04.2026 அன்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கான அறிமுகக் கலந்துரையாடல் கள ஆய்வாளர் பிலோயினி தயாரூபன் அவர்களால், பாடசாலை அதிபர் அவர்களின் ஒத்துழைப்புடன் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், செயற்றிட்டத்தின் அறிமுகம் மற்றும் அதன் நோக்கம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், செயற்றிட்டத்தின் அடைவுகள் மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட விடயங்கள் ஆகியவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், செயற்றிட்ட முகப்பினை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து வழிகாட்டலும் வழங்கப்பட்டது. இதனுடன், மாணவர்களுக்கான சிறப்பு செயற்றிட்டமான நூலக நிறுவனத்தின் திறந்த கல்வி வளங்கள் (Open Education Resources) செயற்றிட்டம் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டது.

நிறைவில் இச்செயற்றிட்டத்தினை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க உதவிய செயற்றிட்ட அனுசரணையாளர்கள், பழைய மாணவர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கான நன்றி நவில்தலுடன் முடிவுறுத்தப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கும் ஆவணப்படுத்தும் தேவைகளுக்கும் தொடர்புகொள்ள
https://noolaham.foundation/wiki/index.php/Contact_us


