அரசியல் கட்சிகளின் தலைவர்களை சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் இளைஞர்கள் தாங்கள் விரும்பும் மாற்றத்தை அடைய முடியாது.
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வரை எதிலும் ஜனநாயகம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவாக தமது அரசியல் நோக்கங்களை அடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் சலுகைகளை வழங்குவதாகவும் அவர்கள் ஏற்கனவே அரசியல் குடும்பங்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த போக்கு தொடரும் வரை, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அமைப்பு மாற்றத்தை அடைய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.