தேர்தல் திருத்தம் என்ற பெயரில் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு.
தேர்தல் திருத்தம் கொண்டு வர சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற பேச்சின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகையில், தேர்தல் முறைமையில் திருத்தங்களைக் கொண்டு வருவது மிகவும் நல்லது என்றாலும், திருத்தம் தொடர்பான தெளிவான பிரேரணை நாட்டுக்கு முன்வைக்கப்படவில்லை.
இதுவரையில் அவ்வாறான வரைவு எதுவும் தயாரிக்கப்படவில்லை எனவும், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மாத்திரமே பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எவரும் அதில் கையொப்பமிடவில்லை எனவும் அவர் கூறினார்.
தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் என்பது உண்மையே. ஆனால் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார்.