IMFஉடனான உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏன் தாமதம்-அனுரகுமார திஸாநாயக்க
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்காதது பாரிய பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.