இங்கிலாந்து மன்னர் உயர் விருதினைப் பெற்ற தமிழ் தொண்டு நிறுவனம் – குரோளி தமிழ்க் கல்விக்கூடம்

இங்கிலாந்தில் அரசர் பெயரினால் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான  The King’s Award for Voluntary Service – KAVS என்ற விருதினை இவ்வாண்டு 2025 குரோளியில் அமைந்துள்ள தமிழ் கல்விக்கூடம்  TAMIL Learning Centre  என்ற தமிழர் அமைப்பு தனது தன்னார்வ சேவைக்காக பெற்று பெருமை சேர்த்திருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்க்கல்விக்கூடம்   குரோளியில்   உள்ள தமிழ் மற்றும் பரந்த சமூகத்திற்கு தமிழ்க்கலாச்சார வேர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி,   இளைந்தலைமுறையினருக்கு தமிழக் கல்வியினை  கற்பிப்பதன் மூலம்,  தமிழ் பண்பாட்டு வாழ்வியல் கலாசார சமூகங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டு பணிகளுக்கான அரச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இன்று செவ்வாயக்கிழமை , குரோளியில் Langly Drive    இல்   அமைந்துள்ள  Crowne Plaza Hotel இல்  இந்த விருது விழா சிறப்பாக நடைபெற்றது.West Suseex  இன்  The Lord-Lieutenant ,  அரசரின் அதிகார பூர்வ பிரதிநதி   Lady Emma Barnard  உடன் இணைந்த அரச பிரதிநிதிகளான லெப்ரினன்கள் கூடி அரச முறைப்படி இந்த விருதை வழங்கி குரோளி தமிழ்க்கல்வி கூடத்தின் சேவை யை பாராட்டி கௌரவித்தார்கள். இந்த அரச  அதிகாரப்பூர்வ விழாவிற்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கபட்டிருந்தார்கள். இங்கிலாந்து அரச  பிரதிநிதிகள், தமிழக்கல்விக் கூட தன்னார்வலர்கள், West Sessex கவுன்சலர்கள், ஊடவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Lady Emma,  தமிழக்கல்லிக்கூடத்தின் சேவையை பாராட்டி உரையாற்றினார். அவரைத்தொடர்ந்து  துணை லெப்ரினன்  Lady  Shelagh இங்கிலாந்து மன்னரின் கையெழுத்திட்ட பாராட்டுத் சான்றிதழை வாசித்து வழங்கினார்.  தமிழ்க்கல்விக் கூட தன்னார்வத் தொண்டை அங்கீரித்து வழங்கப்பட்ட இந்த அரச விருத்தினை  தமிழ்க்கல்விக்கூடத்தின் இயக்குனார் திருஎஸ் சிவசீலன் அவர்கள் அனைத்து தெர்ணடர்கள் சர்ர்பாகவும் பெற்றுக் கொண்டார்.
விருது வழங்கலைத் தொடர்ந்து அரச பிரதிநிதிகளுடன் நிழ்வுக்கு வருகை தந்தவர்கள் அளவாவி கருத்துக்களையும் நன்றியையும் பரிமாறிக் கொண்டதோடு, அவர்களுடன் இணைந்து  பிற்பகல் தேநீர் விருந்து உபசாரத்iதிலும் பங்குகொண்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான மன்னரின் விருதினைப் பெறும் தொண்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு நொவெம்பர் மாதம் 14ம் திகதி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து முழுவதும்  281 தொண்டு நிறுவனங்கள் சிறந்த சமூக சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட நிலையில் குரோளியில் உள்ள் தமிழக் கல்விக்கூடம் இந்த உயர் விருதிற்காக இடத்தைப் பெற்றதாகவும் அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டடிருந்தது. முன்னர் தன்னார்வ சேவைக்கான மகாராணி விருது என்று அழைக்கப்பட்ட இந்த விருது, அவரது மறைவைத் தொடர்ந்து  மன்னர் விருதாக மாற்றப்பட்டது.இது இங்கிலாந்தில் தன்னார்வ அமைப்புகளுக்கான மிக உயர்ந்த விருது என்ற சிறப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர் தேசத்தில் பல தொண்டுப்பணியாற்றும் நிறுவனங்கள் மத்தியில் குரோளி தமிழ்க கல்விக்கூடம் தனது  தன்னார்வ சேவைக்காக  அரச விருதினைப் பெற்று இங்கிலாந்து வாழ் தமிழச்சமூகத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றது.  அவர்களது சாதனையைiயும் சேவையையும் மெய்வெளி ஊடகம் பாராட்டி நிற்கிறது.