பிரித்தானியாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளம் தாய் ஒருவர் கடல் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதார்.

லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான, 28 வ28 வயதான காயத்ரி ஜெயதீசன் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாதபோது தனது இளம் மகன் மற்றும் அவரது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். அவரது கணவர் ஸ்டான்லி வீதியில் உள்ள தனது கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.உடல் நிலை பாதிக்கப்பட்டவுடன் இது தொடர்பில் தனது கணவனுக்கு மனைவி வட்ஸ்அப் செயலி மூலம் அவருக்கு தகவல் வழங்கியுள்ளார். உடனடியாக கணவர் அம்பியுன்ஸை அழைத்தார். எனினும் துணை மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. காயத்ரியின் மறைவால் குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.

அவரது மகள் உயிரிழந்த நேரத்தில் அவரது தாயார் இலங்கையில் இருந்து வந்திருந்ததாகவும் மதிய உணவிற்கு சிறப்பு விருந்தாக நண்டு வாங்கியிருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது. காயத்ரி இலங்கையில் வசிக்கும் போது நண்டு சாப்பிட்ட நிலையில் பிரித்தானியாவில் முயற்சித்தது இதுவே முதல் முறையாகும். அவரது தாயின் உதவியின்றி அதை எப்படி சமைப்பது என்று அவருக்குத் தெரியாமல் இருந்துள்ளார். தாயாருடன் உணவு சமைத்து உட்கொண்ட நிலையில் அவர் இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

காயத்ரி தனது கணவர் செல்வராஜாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு 15 மாத வயதை கொண்ட மகனும் உள்ளார். இந்த தம்பதி கடந்த 27ஆம் திகதியன்று அவர்களின் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட ஆவலுடன் காத்திருந்தனர். கணவர் ஜெயதீசன் இந்த நிகழ்விற்காக புதிய ஆடைகளையும் வாங்கியிருந்தார். அவர்கள் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டாட திட்டமிட்டிருந்தனர். காயத்ரிக்கு எவ்வித உடல்நல பாதிப்புகளும் இல்லை. அவருக்கு இறால் ஒவ்வாமை இருந்தது, ஆனால் நண்டு சாப்பிடும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.