ஜனவரி 22  சீமானுக்கு எதிராக நடவடிக்கை: திருமுருகன் காந்தி போட்ட எக்ஸ் பதிவினால் பரபரப்பு.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் பற்றி பேசியது மிகவும் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 70 வழக்குகள் வரை பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரியார் அமைப்பினர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவருடைய பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம்  தெரிவித்து வருகிறார்கள். அதாவது பாலியல் இச்சை வரும் போது தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக அவர் கூறினார். இது பூதாகரமான பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில் தற்போது மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் சீமானின் பேச்சுக்கு கட்டணம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி சீமானின் வீடு முற்றுகை இடப்படும் என்று தற்போது தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் பெரியார் உணர்வாளர்கள் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.