ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பு
- வீடியோ இணைப்பு -
பயங்கரவத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்ற வகையில் நியாயமாக செயற்படுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதியை தெரிவித்துள்ள திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதையும், போராட்டக்காரர்களை கைது செய்வதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் சரியாக செயற்படவில்லை எனின், இந்த நாட்டிற்கு தெரிவிக்கப்படும் முன்னுதாரணம் என்ன? கடந்த சில தசாப்தங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் கடந்த தேர்தலில் மாத்திரமே தோல்விடையந்தீர்கள். அவ்வாறான நீங்கள் முதிர்ச்சியுடனும், முன்னுதாரணமாகவும் செயற்பட வேண்டும் என்பதை நாம் தெரிவிக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் உங்களை பிரதமராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில், தெரிவிக்கின்றோம் நீங்கள் இவ்வாறு செயற்படுவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜீவந்தர, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்கள் வளர்ச்சியடைந்த இளைஞர் சமுதாயத்தின பிரதிநிதிகளே. அவர்கள் ஜனநாயகத்தை செயற்பாடுகள் மற்றும் அனுகுமுறைகளை மதிக்கும், நிராயுதபானிகளான மக்களையே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றா
இலங்கையில் இடம்பெறும் மக்கள் சார்பு ஜனநாயகப் போராட்டங்களில் முன்னிற்கும் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.