விவசாயத்தில் நவீனமயமாதலை எதிர்த்து 40 விவசாயிகள் சுட்டுக் கொலை : நைஜீரியாவில் சம்பவம்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் மேற்கத்திய கலாச்சார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
இவர்கள் விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசித்து வரும் கிராமத்திற்குள் புகுந்து அவ்வப்போது தாக்குதல் நடத்துவர். இதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் நேற்று ஆயுத இந்திய கும்பல் ஒன்று புகுந்தது. அதன் பின் அவர்கள் அங்குள்ள விவசாயிகளை சரமாரியாக சுட்டு தாக்கினர். இந்த சம்பவத்தில் 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், அதோடு பலரும் காயமடைந்துள்ளனர்.