பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினக் கொண்டாட்டம்.
உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனவரி 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது.
இங்கு பிரதமர் அலுவலக அதிகாரிகளால் பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் மற்றவர்களின் மதம், கலாச்சார உரிமைகளை மதிக்கும் விசேட மனித பண்புகள் மற்றும் நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த தைப்பொங்கல் தினத்தில் நாம் மீண்டுமொரு முறை உறுதிகொள்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் சமூகத்தின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினமாக இன்றைய தினம் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.