மாணவி வன்கொடுமை -இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு சிபிஐ விசாரணை மட்டும்தான் தமிழிசை வலியுறுத்தல்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திநகரில் பாஜகவின் தலைமை அலுவலகம் கமலாயத்தில் உள்ளது. இங்கு ஈரோடு இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜாக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியபோது, தமிழக ஆட்சி மீது பெண்களுக்கு நம்பிக்கை குறைகிறது. தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவதற்கு அனைத்து கட்சிக்கும் அனுமதி உள்ளது. ஆனால் மாநில அரசு காவல்துறையை கைக்குள் வைத்து அடக்கு முறையை மேற்கொண்டு கைது செய்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலில் வன்கொடுமை குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாததால் குற்றவாளிகள் மிக சுதந்திரமாக நடமாடுகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை மிகவும் சந்தேகம் அளிக்கிறது. எதிர்த்து போராடினால் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி மறுக்கிறீர்கள் இங்கு எந்த ஜனநாயகம் இருக்கிறது. அவசர நிலை ஆட்சி போல் அனைவரின் குரல்வளையும் நெறிக்கப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பாஜகவளாகத்தில் வலிப்பு நோய் ஏற்பட்ட ஒருவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி செய்து காப்பாற்றினார். இச்செயலால் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.