நடிகர் விஜயையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கட்டுப்படுத்தும் மூவர்


அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான், என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் நடிகர் விஜய் கால் பதித்துள்ளநிலையில,  அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.

மேல் மட்டத்தில் இருக்கும் மூவர், விஜய் உள்ளிட்ட மொத்த கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் முன்னாள் மக்கள் பிரதிநிதியும், வியூகம் வகுத்துக் கொடுக்கும் நபரும் மட்டுமே, விஜய் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி, விஜயை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த இருவர் தவிர, மூன்றாவதான நபர், வருமான வரித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி எனக் கூறப்படுகின்றது.

இவர்கள் மூவரும் என்ன நினைக்கின்றனரோ, அதை மட்டுமே விஜயால் செயல்படுத்த முடிகிறது என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் சுதந்திரப் பறவையாக இருந்து, தமிழக மக்களை ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று சந்தித்து, கட்சியை வளர்க்க வேண்டிய விஜயை, வீட்டுக் கிளியாக முடக்கிப் போட்டுள்ளனர். மூவரையும் கடந்து, வெளியாட்கள் யாருமே விஜயை சந்திக்க முடியவில்லை.இதனால், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில  இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.