நகைச்சுவை இருந்தது, திகில் இருந்தது, தத்துவம் இருந்தது

- Dr. தேன்அல்லி காசி ஆனந்தன் -


“மரணத்தை விட கொடியது” நாடகத்தை, நேற்று (14/12/24), தமிழ் தகவல் நடுவம் நடத்திய “உலக மனித உரிமை நாள்” நிகழ்வில் பார்த்து மகிழ்ந்தேன்.

“நாம் தமிழர்” என்னும் உணர்வை, பெருமையை, நாம் என்றும் மறந்துவிடகூடாது என்று இந்த நாடகம் வலியுறுத்தியது. இந் நாடகத்தில் நகைச்சுவை இருந்தது, திகில் இருந்தது, தத்துவம் இருந்தது, மகிழ்ச்சி இருந்தது, சோகம் இருந்தது. ஆக அனைத்து உணர்ச்சிகளும் அளவாக கலந்து நாடகத்தை இரசிக்க தூண்டியது.

இசையும், வசனங்களும், நடிப்போரின் முக பாவங்களும், அடுத்து என்ன என்று எதிர்ப்பார்க்க வைக்கும் நாடகத்தின் இயக்கமும் நம்மை இருக்கையில் கட்டிப் போட்டன.

தமிழன் என்ற அடையாளத்தை நாம் மறந்தால், இழந்தால் நம்மையே இழந்து விடுவோம் என்பதை ஆனித்தரமாக கூறியது “மரணத்தை விட கொடியது” நாடகம். நாடக முடிவில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதே, இந்நாடகம் அனைவரது மனதையும் கவர்ந்தது என்பதற்கான சான்று. இயக்குநர் சாம் பிரதீபன் அவர்களுக்கும் அவரின் நாடக குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.