முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.அவ்வாறு எந்த நீக்கமும் செய்யப்படவில்லை.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாவலர்கள் 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு தற்போது 57 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளனர்’ என்றார். அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போன்று தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.