பிரித்தானியா பிரதமர் கியர் ஸ்ராமருக்கான மக்களின் ஆதரவுகள் வேகமாக சரிவதாக ஆய்வில் தகவல்
சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரித்தானியா பிரதமர் கியர் ஸ்ராமருக்கான ஆதரவுகள் பிரித்தானியா மக்களிடம் கடுமையான வீழச்சி கண்டு வருவதாக அண்மையில் இடம் பெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் ஆட்சிக்கு வந்த ஸ்ராமருக்கான ஆதரவுகள், முன்னாள் பிரதமர் ரிசி சுனாக்கைவிட குறைந்துள்ளதாக பிரித்தானியாவின் த ரெலிகிராப் பத்திரிகை கடந்த திங்கட் கிழமை வெளியிட்ட தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வரலாற்றில் பிரதமருக்கான ஆதரவுகள் கடுமையாக வீழ்ச்சி கண்டது இதுவே முதல் முறையாகும். 1,012 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 1011 புள்ளிகளாக இருந்த முன்னைய ஆதரவுகள் தற்போது எதிர்மறையாக -39 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அதாவது 49 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி, தேசிய பாதுகாப்பு,எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார உறுதித் தன்மை என்ற வாக்குறுதிகளை முன் வைத்து ஆட்சியில் அமர்ந்த ஸ்ராமருக்கான ஆதரவுகள் நான்கு மாதங்களில் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1060 புள்ளிகளாக இருந்த தொழிற்கட்சியின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரின் ஆதரவுகள் 3 வருடத்தின் பின்னர் தான் எதிர்மறையாக மாறியிருந்தது ஆனால் ஸ்ராமருக்கான ஆதரவுகள் சில மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட முதலாவது வரவுசெலவுத்திட்டமும் அதிக வரிகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது. வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கவலை அடைந்துள்ளதாக 68விகித மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தானியா ஒரு மோசமான நிலைக்கு செல்வதாக 70 விகிதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.