விஜய் ரசிகர்கள் எனக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிப்பு
விஜய் வருகையால் எங்கள் கட்சி ஓட்டு குறையாது; விஜய் ரசிகர்கள் எனக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
எங்களுக்கு ஒரே நோக்கம் தான்.
ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலை யாரும் சந்திப்பது இல்லை. கூட்டணி இல்லாமல் யாரும் தனித்து போட்டியிடுவது இல்லை. இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது இல்லை. ஒரே ஒருமுறை 2014ல் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுடைய தத்துவம் தனித்துவமானது என்பதால் மற்றவர்களுடன் சமரசம் செய்ய முடியவில்லை. சமரசம் இல்லை2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன்.
கொள்கையில் சமரசம் இல்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.இ மத்தியில் ஆள்வதால்இ எந்த மாநிலத்திற்கும் உரிமை இருக்காது. எந்த மாநில உரிமைகளையும் பாதுகாக்காது. எந்த மாநில மொழிகளையும் வாழவிடாது. ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். நாட்டில் கூட்டாட்சி இருக்கும் போது தான் நாடு நன்றாக இருந்தது. கூட்டணி வைக்காத மாநிலத்திற்கு என்ன சேவை செய்து இருக்கிறார்கள். 40 சீட் தி.மு.க.இ வெற்றி பெற்று இருக்கிறது. ஏதும் பயன் இருக்கிறதா? தோற்று போன எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள்.
விஜயோ, ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது இருந்த சூழ்நிலையிலோ, கமல்ஹாசன், விஜய காந்த் ஆகியோரை எடுத்து கொண்டாலும் சரி, அவர்கள் ரசிகர்களை சந்தித்தார்கள். நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. எனக்கு ரசிகர்கள் கிடையாது. ரசிகர்களை தொண்டர்கள் ஆக்கவில்லை. ஓட்டுக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் தனித்து போட்டியிட்டு, 36 லட்சம் ஓட்டுகளை பெற்றேன். இந்திய அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நாங்கள் தான். கூட்டத்தை வைத்து முடிவு செய்ய கூடாது. ஒரு நடிகர் வந்து ஒரு இடத்திற்கு வரும்போது, மக்கள் அதிகமாக கூடுவார்கள். இது இயல்பு தான். விஜய் ஓட்டு என்னுடைய ஓட்டு அல்ல. விஜய் வருகையால் எங்கள் கட்சி ஓட்டு குறையாது; விஜய் ரசிகர்கள் எனக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.