ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் வகுத்திருக்கும் திட்டத்தில் பிரித்தானியா பங்கு : கசிந்தது தகவல்

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் வகுத்திருக்கும் திட்டம் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.அது குறித்து அமெரிக்கா புலனாய்வு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான பழிவாங்கும் தாக்குதலுக்கு இஸ்ரேலின் தயாரிப்புகளை விவரிக்கும் ஒரு ஜோடி மிகவும் ரகசிய ஆவணங்கள் கசிந்ததை அமெரிக்க அரசாங்கம் விசாரித்து வருகிறது.கசிந்த தகவல்கள் மிகவும் ரகசியமானவை என்று வகைப்படுத்தப்பட்ட அந்த ஆவணங்கள் வுநடநபசயஅ செயலியில் பகிரப்பட்டன.

ஈரானுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் அதன் வளங்களைத் திரட்டி வருவதாகஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஈரானைத் தாக்கும் இஸ்ரேலின் திட்டங்களில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கசிந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஈரான் கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, ஆறு மாதங்களில் அதன் இரண்டாவது நேரடி தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லாத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் அந்தத் தாக்குதலை நடத்தியது.