தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் பின்னணியில், ‘கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் ‘சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார்.
காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்’ அவர் தெரிவித்துள்ளார்.