கோடிகளைத் தாண்டிய பிள்ளையான் சேர்த்த சட்ட விரோத சொத்துக்கள் வெளியாகியுள்ளதாக தகவல்.

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International> Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். அறிக்கையில் பல தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள சொத்துக்கள். மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் அமைந்துள்ள  2 கோடி பெறுமதியான வீடு, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ள 6.5 கோடி பெறுமதியான வீடு, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள 23 கோடி பெறுமதியான வீடு, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ள 12 கோடி பெறுமதியான வீடு, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் அமைந்துள்ள  5 கோடி பெறுமதியாக சுற்றுலாவிடுதி, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் அமைந்துள்ள 17 கோடி பெறுமதியாக சுற்றுலாவிடுதி, மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி.

திருகோணமலை கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி.
மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.

மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில்  வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில்  நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.

ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி. இதேவேளை வெளிநாட்டு சொத்துக்களாக  சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு  இதன் பெறுமதி: 7.5 கோடி. சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி.

வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள். பிள்ளையானின் சட்டவிரோத சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.