ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக அந்த அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து அந்த அமைப்பு பணியாற்றி வந்துள்ளதுடன்இ அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.