பெய்ரூட் சர்வதேச விமான நிலையம் அருகில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தஹியா நகரின் மீது ஏராளமான கனரக குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெய்ரூட்டின் தலைநகரான ஹிஸ்புல்லாவின் கோட்டையாக இருந்த தஹியா நகரில் பல மிகக் கடுமையான வெடிப்புகள் இடம்பெற்றதாக நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுகள் வீசப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூழவுள்ள வானத்தில் பாரிய தீ மேகங்கள் முற்றாக நிரம்பியிருந்ததாகவும்,அப்போது ஏற்பட்ட சேதத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். பெய்ரூட் விமான நிலையம் இன்னும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.