இலங்கைப் பொதுத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க ஜஸித் பிரேமதாச தீர்மானம்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இளைஞர்கள் பிரநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து வேட்புமனு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தேர்தலுக்கு வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் போது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்களின் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவது கட்சி உறுப்பினர்களின் கருத்தாக உள்ளதால் அந்த யோசனையை செவிமடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடங்கும் வகையில் புதிய மூன்று வேட்பாளர்கள் அல்லது மாவட்ட ரீதியில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரநிதித்துவப்படுத்திய கட்சிகளுடன் இணைந்து இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புதிதாக இணையவுள்ள கட்சிகள் என்ன என்பது தொடர்பில் கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் அறிவிப்பதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.