புதிய ஜனாதிபதியின் தலைமையில் வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும்: ஐஎம்எப் தலைவர் நம்பிக்கை


சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் உட்பட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு நிலையான பங்காளியாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமை உதவும் என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">