மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதியின் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(26.09.2024) நடைபெற்றது. புதிய ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்க அவர்களுடனான இந்த விசேட கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
01. மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் போதிய எரிபொருள் கையிருப்பை பேணுவதன் முக்கியத்துவம்
02. இந்திய உதவித் திட்டத்தின் கீழ் மின்சக்தி அமைச்சிற்குக் கிடைத்துள்ள சூரிய சக்தி பெனல்களை விரைவில் 800 பிரிவெனாக்களுக்கு வழங்குவதற்கான திட்டமொன்றைத் தயாரித்தல்
03. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடனுதவிகளின் கீழ் மின்சக்தி அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் அவசியம் மற்றும் வெளிநாட்டு உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க ஒரு குழுவொன்றை நியமித்தல்
04. கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு பணம் கிடைக்கும் முறைமையொன்றை துரிதமாக ஆரம்பிப்பதன் அவசியம்
போன்ற விடயங்களே இந்த சந்திப்பில் அலசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.