• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வழமைக்கு மாறாக ஜனாதிபதி சிங்களத்தில் கையெழுத்திடுவது பற்றி சுமந்திரன் விசனம்

By Editor Last updated Sep 2, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

இதுவரை காலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் நீரிறைக்கும் இயந்திரத்துக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தங்களது படகு இயந்திரங்களுக்கும் மண்ணெண்ணெய் இல்லாது அவஸ்தைப்படுகின்றனர்.

Catchup shows

இந்த விடயத்தை எவ்வளவு தடவை எடுத்துக்கூறியும் அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்க வில்லை. கிடைத்த ஒரேயொரு பதில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 340 ரூபாவாக 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு மட்டுமே வந்ததே தவிர மண்ணெண்ணெய் வரவில்லை.கஷ்டப்படுகின்ற விவசாயிக்கும் கடற்தொழிலாளிக்கும் இதுவரைக்கும் எந்த நிவாரணமும் கொடுக்கப்படவில்லை.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் கூட மண்ணெண்ணெய் பாவிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்ற முன்மொழிவு இருக்கின்றது. ஆனால் ஒதுக்கீட்டில் இந்த நிவாரணத்துக்காக ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.அண்மைய நாட்களாக துப்பாக்கி சூட்டு மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த மரணங்களை தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ பொலிஸ் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால் மக்களின், மாணவர்களின் போராட்டங்களி அடக்கவே பொலிஸ் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு இடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தால் அங்கு 1000 பொலிஸார் நிற்கின்றனர்.ரணில் விக்கிரமசிங்க வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார் ஆனால் அவர் ஜனாதிபதியானதன் பின்னர் 3 தடுப்புக் காவல் சட்ட ஆவணங்களிலும் சிங்களத்தில்தான் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரின் மன நிலை மாறி வருவதனைக் காண முடிகின்றது’ என்றார்.

Prev Post

ஊடகப்பிரிவில் 40 நியமனங்கள் எதற்கு? :ஜனாதிபதி ரணிலிடம் அநுர குமார கேள்வி

Next Post

மே 9 தாக்குதல், பாதுகாப்பு செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விகள்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.