அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு

இந்திய நாட்டில் மத சுதந்திரம் குறித்து, அண்மையில் அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஆதரவு பெற்ற சீக்கிய அமைப்பினர் சிலர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்கு எதிரே கூடி பேரணி நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கோஷாகங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகின்றனர். ராகுல் காந்தி அவரது மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தின் போது, இந்தியாவில் நடக்கும் போராட்டம் அரசியலைப் பற்றியது அல்ல என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஒரு சீக்கியராக அவர் இந்தியாவில் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது சீக்கியராக இருக்கும் அவர் கையில் காப்பு அணிய அனுமதிக்கப்படுவாரா என்பது தான் இப்பொது இந்தியாவில் பெரிய பிரச்சனையாக உள்ளது.

அது அவருக்கு மட்டுமல்ல, எல்லா மதத்தினருக்கும் இதே நிலை தான் என்று பேசியிருந்தார். அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய இந்த கருத்துக்கள், இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், ராகுல் காந்தி வெளிநாட்டில் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவது வழக்கம் தான் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காந்தியின் கருத்து ‘கெட்டது’ என்றும், ‘ஆபத்தான கதைகளை’ வெளிநாடுகளில் அவர் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.