காளி படத்தின் கதை குறித்து இயக்குநர் லீனா மணிமேகலை விளக்களித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் முதுநிலை கவின்கலை படித்துவரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின்கீழ், காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.
இது ஆகா கான் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில், இதுகுறித்த போஸ்டரை லீனா வெளியிட்டுள்ளார். அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், கையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் வானவில் கொடியை ஏந்தியிருப்பது போன்றும் உள்ளது. அதனை கண்டித்து டிவிட்டரில் “அரெஸ்ட் லீனா மணிமேகலை” என்ற ஹேஷ்டேகில் பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து, வருகின்றனர்.