பங்களாதேஷியில் தொடரும் வன்முறை: இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் வன்முறையால் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையேயான மோதல் வன்முறை வெடித்தது. போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டது.இந்த வன்முறையால் பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போராட்டம் காரணமாக நாடாளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள் அறிக்கையில், வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.