இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால், சுதந்திரம் பறிபோகும் : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரிக்கை
இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி உலகளாவிய கொரோனா பரவல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருக்கிறது.
இதனால் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுக்காக இலங்கையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும்? இந்தியா – இலங்கை அரசுகள் இடையே தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கடல் வழியாக பாலம் அமைக்கும் திட்டம் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால், சுதந்திரம் பறிபோகும், இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும். இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும். அதுபோல, இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும்’ என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.