கேரளா மாநிலத்தின் பெயர் மாற்றம்: மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் தொழில்நுட்ப காரணத்தால் தடைப்பட்டதாக கூறப்பட்டது.எவ்வாறாயினும் சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. மேலும் அம்மாநில முதல்வர் விடுத்த வேண்டுகோளில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாகின.
அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் முதலாம் திகதி தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது.ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3 இன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.