ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க ரணில் சதி செய்வதாக அரசியல் கட்சிகள் அச்சம்
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது ஆலோசகர் ஒருவர் தலைமையில் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார். இந்தக் குழு ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது எனத் தெரிவித்துள்ளாh. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்ற மனநிலையை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்காகும் எனக் கூறினார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்றால் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை மீற வேண்டும். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதை நோக்கமாக கொண்டு ஐ.தே.கவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஆளுங்கட்சினரும் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதற்கு ஜனாதிபதியின் மறைமுக ஆசி உள்ளதாகவும் அறிய ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற போகிறதென கணிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதுடன், தேசிய மக்கள் சக்திக்கு வரலாறுகாணாத வகையில் மக்களின் ஆதரவு பெருகியுள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.அதனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது.