கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய்:  கூட்டமைப்பு மீது எழுப்பப்படும் கேள்விகள்

 


ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதி உச்சமான அளவில் அதிகாரம் பகிரப்பட வேண்டும்  என இரா.சம்பந்தன்  கூறியுள்ளார்.

ஆனால் அக்கோரிக்கையை கடந்த 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது  ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வியும் எழுப்பியுள்ளது .தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் வேட்பாளர்கள் முன்வைக்கப் போகின்றார்கள் என்பதை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும் என இரா. சம்பந்தன் கூறிவருகின்றார்.

ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரிவித்திருந்தார். அதேநேரம் அவரது இந்த கூற்றை கூட்டமைப்பினர் எவரும் மறுத்திருக்கவும் இல்லை.அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.