இந்தியா – கனடாவிற்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் :முக்கிய காரணத்தை தெரிவித்த இந்திய வெளியுறவு செயலாளர்
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் முக்கிய பிரச்சனை கனடாவில் உள்ள இந்திய எதிர்ப்பு குழுக்களுக்கு கொடுக்கப்படும் ‘அரசியல் இடம்’ என்று இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாட்ரா சுட்டிக்காட்டினார்.
இந்த குழுக்கள் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கருதப்படுகின்றன. கனடாவின் வான்கூவர் மற்றும் பிராம்டன் நகரங்களில் நடந்த பேரணிகளில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை சித்தரிக்கப்பட்ட ஊர்வல வண்டிகள் இடம் பெற்ற பின்னர் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது.கனடா இந்திய தூதர் சஞ்சய் வர்மா சமீபத்தில் கனடா அரசாங்கத்தை இதுபோன்ற வன்முறை மற்றும் வெறுப்புணர்வு வெளிப்பாடுகளுக்கு எதிராக ‘முன்மாதிரியான நடவடிக்கை’ எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தாலும், இந்த சமீபத்திய போராட்டங்களில் இதுபோன்ற தூண்டுதல்கள் அடங்கியிருந்த போதிலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.
கனடாவில் சிக்கிய தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து கனடா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளது.கனடாவின் குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே பதற்றமடைந்த உறவுகளுக்கு இடையே சமீபத்திய நிகழ்வுகள் மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்த குழுக்களுக்கு வழங்கப்படும் இடம் குறித்து இந்தியாவின் கவலைகளை வலியுறுத்தி, கனடா இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குவாட்ரா கேட்டுக்கொண்டார்.