இங்கிலாந்து பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன்:தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின் அறிவிப்பு
பிரிட்டன் பொதுத் தேர்தலில் இஸ்லிங்டன் நோர்த் தொகுதியில் தொழிற்கட்சி வேட்பாளர் பிரபுல் நர்குண்டை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின் அறிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு எதிராக போட்டியிடுவது என்பதன்மூலம் 58 ஆண்டுகால உறுப்பினராக இருந்த கோர்பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் தொகுதி தொழிலாளர் கட்சி மீது, கட்சித் தலைமையால் இரு நபர்களின் பெயர் பட்டியல் திணிக்கப்பட்டபோது, அதற்கான உரிமை கோரி ஒருமனதாக ஒரு பிரேரணையைத் தொடர்ந்து, அதன் சொந்த வேட்பாளர்களை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. கோர்பின் 1983 முதல் 2021 வரை வடக்கு இஸ்லிங்டனில் தொழிற்கட்சிக்காக போட்டியிட்டிருந்தார். தனது அரசியல் விசுவாசத்தை தெளிவுபடுத்தும் வகையில், அவர் தனது தேர்தல் அறிக்கையில் ‘எப்போதும் தொழிற்கட்சியை ஆதரித்து, உண்மையில் தொழிற்கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்கள், வடக்கு இஸ்லிங்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவும், அதே கொள்கையில் நான் எப்போதும் இந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக சேவை செய்யவும் நான் இங்கு வந்துள்ளேன் என்பதை புரிந்துகொள்வார்கள்’ என்று தனது ‘நம்பிக்கையை’ வெளிப்படுத்துகிறார்.
இன்னும் தொழிற்கட்சியில் இருக்கும் சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் எம்.பி.க்களின் சக உறுப்பினர்கள் எவருக்கும் கோர்பின் தன்னுடன் சேர அழைப்பு விடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது