தோல்வியை தழுவிய அண்ணாமலை!

மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், முன்னிலை விவரங்களும், வெற்றி விவரங்களும் வெளியாகி கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், சில இடங்களில் தோல்வியையும் அடைந்திருக்கிறது. அந்த வகையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை 2,86,503 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

காலையில் இருந்து முன்னிலை வகித்து கொண்டு இருந்த திமுக வேட்பாளர் கணபதி பி.ராஜ் குமார் அண்ணாமலையை விட 7,3725 வாக்குகள் அதிகமாக பெற்றார். மொத்தமாக 3,60,228 வாக்குகளை பெற்று கோவை தொகுதியில் வெற்றிபெற்றார்.

அதைப்போல, அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ஜி ராமச்சந்திரன் 1,48,915 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கலாமணி ஜெகநாதன் 51,365 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தனர்.