ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு
கடந்த 2006-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இதனை குறித்து வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டார்மி டேனியல்ஸ் அப்போது கூறி இருந்தார்.
இது தொடர்பாக, டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் மொத்தம் 34 குற்றசாட்டுகளை அவர் மீது வைத்தனர். ஆனால் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். குறிப்பாக ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு தான் பணம் கொடுக்கவில்லை என மறுத்தார். ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகளை தொடர்ந்து 6 வாரங்களாக நியூயார்க் நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கின் 12 நடுவர்கள், 2 நாட்கள் விவாதித்து தற்போது டிரம்ப் தான் வரலாற்றுபூர்வமான தீர்ப்பை குற்றாவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கு தண்டனையாக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றும் பெரும்பாலுமகா அபராதமே விதிக்கப்படும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குற்ற வழக்கு அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவதும் அவர் தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவதும் அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
டிரம்ப் தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது