மப்பும் வெளிப்பும் இடியும் மழையும் நிறைந்த மே மாதம் வெயில் வீழ்ச்சி!

ஜூன் வரை சீரற்ற நிலை அதன்பிறகுதான் கோடை

இந்த ஆண்டு மே மாதம் வழமைக்கு மாறாக வெயில் குறைந்தும் மழை, மற்றும் இடிமின்னல் புயல் மழை அதிகமாகப் பதிவாகிய மாதமாகவும் காணப்படுவதாக வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
காற்று அமுக்கத் தாழ்வு மண்டலம் காரணமாகக் கடந்த ஒருவாரமாக வானம் அடிக்கடி மப்பும் வெளிப்புமாகத் தென்படுகிறது. குறைந்த நேரத்தில் கொட்டித் தீர்க்கும் இடிமின்னல் மழை நாட்டின் பல பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் புயல் கண்காணிப்பு மையமாகிய கெரோனோஸின் (Keraunos) தகவலின் படி கடந்த மே முதலாம் திகதி தொடக்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 900 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.
தரையில் வெப்பமும் உயரத்தில் குளிரும் காரணமாக உருவாகின்ற ஒழுங்கற்ற தாழ்வு மையமே உள்நாட்டில் தற்போதைய சீரற்ற வானிலைக்குக் காரணமாகும்.
இருண்ட மே மாதத்தைக் கடந்த கொண்டிருக்கின்ற நாட்டு மக்கள் கோடை வெயிலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது பெரும்பாலும் ஜூன் மாதத்திலேயே தொடங்கும். கோடைகால வெயிலும் வெப்பமும் ஜூன் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பமாகலாம் என்று வானிலை அவதான நிலையமாகிய மெத்தியோ பிரான்ஸ் தெரிவிக்கிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">