பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு என்பது மதச்சார்பற்ற அமைப்பு. அதனை தவிர்த்து மதத்தின் அடிப்படையில் பிரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். ஆனால் இந்த உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறி வருவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை பயன்படுத்தி வருவதாகவும் , இதனை அம்பலப்படுத்துவதே தனது முயற்சி என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது காங்கிரஸ் அதில் இருந்து விலகி செல்கிறது என்றும் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார் பிரதமர் மோடி.