*லண்டன் மற்றும் ஒக்ஸ்போட்டில் இடம்பெறும் மே 18 இன அழிப்பு நாள் நிகழ்வுகளில் நடைபெறவுள்ள மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் (Sri Lanka: Counting the Dead Project). *

 

இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளின் போது, 1948 இலிருந்து 2009 வரை, இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டுவதற்காக, மனித உரிமைகள் தரவாய்வுக் குழு (HRDAG) மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (ITJP) ஆகிய இரு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து “சிறிலங்கா: மரணித்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம்” (Sri Lanka: Counting The Dead Project) என்ற செயல்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து முன்னெடுத்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவாக, 18 மே 2024 அன்று லண்டன் பராளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறவுள்ள நினைவு நிகழ்வுகளுக்கும், ஒக்ஸ்போடில் உள்ள தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கும் வலுச்சேர்க்கும் முகமாக, இந்தப்பணி இந்த இரண்டு இடங்களிலும் நடைபெறவுள்ளது.

2009 இல் இனப்படுகொலை யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டு இல்லாமல் போனார்கள் என்ற சரியான எண்ணிக்கையோ முழுமையான பட்டியலோ எவரிமும் இல்லை.

இதனால் இதுவரை இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை தயாரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒரு பணியாகும். பெயர் பட்டியலை தயாரிப்பது, அவர்களுக்கான நினைவு சின்னங்களை அமைத்து அஞ்சலி செய்வது மற்றும் அவர்களுக்கான நீதி தேடல் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த பணி முன்னெடுக்கப்படுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை சர்வதேச நீதிமன்றில் நிறுவுவதற்கும் இந்த பட்டியல் அவசியமானது.

”இறந்துபோனவர்களின் பெயர்களைப் பதிவுசெய்வது நாம் அவர்களுக்கு செய்தும் உரிய மரியாதையாகும்” என்கிறார் ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா அவர்கள்.

“உயிரிழந்தவர்களின் பெயர்களைச் சேகரித்து அவற்றை நிரற்படுத்துவதன் மூலம் இழப்பின் தொகையை சரியாக கணிக்கமுடியுமென்பதோடு இறந்தவர்களை மறக்காது என்றென்றும் சமூகத்தால் நினைவுகூர்வதற்கும் அது உதவியாயிருக்கும்” எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

முழுமையான பட்டியல் கிடைப்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாவிட்டாலும், கிடைக்கும் புள்ளிவிவரங்களை கொண்டு, விஞ்ஞான ரீதியில் பகுப்பாய்ந்து, விகிதாசார அணுகுமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதே இந்த பணியின் நோக்கம். சிரியா, கொலம்பியா, சாட், கொசோவோ, குவாத்தமாலா, பெரு, கிழக்கு திமோர், லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் உயிர்இழப்புகளை கணிக்க HRDAG இதே அணுகுமுறையைத்தான் கையாண்டிருந்தது. முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஸ்லோபோடன் மிலோசெவிக் மற்றும் மிலன் மிலுட்டினோவிக் ஆகியோரின் போர்க்குற்ற விசாரணைகளிலும், குவாத்தமாலாவின் உச்ச நீதிமன்றத்திலும், 1982-1982ல் குவாத்தமாலாவின் நடைமுறை அதிபராக இருந்த ஜெனரல் ஜோஸ் எஃப்ரைன் ரியோஸ் மோன்ட்டின் விசாரணையிலும் இந்த அமைப்பு சாட்சியம் அளித்தது. இதன் அடிப்படையிலேயே ஜெனரல் ரியோஸ் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டார்.

இதேபோல, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை நிரூபிக்க, உங்களிடம் இருக்கக்கூடிய போர் மற்றும் ஏனைய காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சம்பந்தமான தரவுகளை தந்துதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களிடம் பேசி அவர்களுக்குத் தெரிந்த மரணித்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அனுப்பி வையுங்கள் என்பதே. இந்த தகவல்களை பதிவு செய்ய இலகுவாக நாங்கள் ஒரு படிவத்தைத் தயார் செய்துள்ளோம். கீழ் உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் தகவல்களை இலகுவாக இணையவழியில் நேரில் ITJPக்கு அனுப்பலாம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe4HOs4i_wBwdSSBkbtOy0JDA97TpicY6FCyVxZsCeyGYCasw/viewform?usp=send_form

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXOjYo-sTlYGX2ehvFsQuqTJW6q3CVFzsd3M-vkNevcdXznA/viewform

அல்லது

தகவல்களை HRDAG மற்றும் ITJP ஆகிய அமைப்புக்களுக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

itjpsl@gmail.com or info@hrdag.org

அல்லது

பொதுநிகழ்வுகளின் போது இந்த பணியை முன்னெடுக்கும் தொண்டர்களிடம் நேரில் வழங்கலாம்.

பட்டியல்கள் ஆங்கிலத்தில் பதியப்படுவது விரும்பத்தக்கது. அல்லது தமிழிலும் பதியலாம்.

தகவல்களை அனுப்புபவரின் பிரத்தியேகம் பாதுகாக்கப்படும்

ஆங்கில, சிங்கள, தமிழ் படிவங்களைத் தரவிறக்க இங்கே here அழுத்தவும்.
https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-ver4.0.docx

https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-Tamil-Ver4.0.docx

மரணமடைந்த ஒருவரைப் பற்றிய என்னென்ன தகவல்கள் தேவை என்பதைப் இப் படிவங்கள் தருகின்றன. சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் கேள்வி பத்திகள் மூலம் சிலவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.
https://itjpsl.com/assets/Frequently-Asked-Questions-in-english.docx

இந்த திட்டம் பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள ITJP யின் இணையத்தளத்தை பார்வையிடவும்: http://www.itjpsl.com/reports/counting-the-dead