ஜனாதிபதித் தோ்தலில் யாா் வெற்றிபறுவாா்கள் : சீனா ரகசிய கருத்துக் கணிப்பு.
அண்மையில் இலங்கை வந்த சீன துணை அமைச்சர் தலைமையிலான குழுவினர் பியகம தேர்தல் தொகுதியில் ஜனாதிபதித் தோ்தலில் யாா் வெற்றிபறுவாா்கள் என்பதை அறிவதற்காக நேரடியாக கருத்துக் கணிப்பை நடத்தினர் என்று தெரியவந்துள்ளது.
உத்தியோகபூர்வ பயணமாக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு உத்தேச ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாக கண்டறியும் நோக்கில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த கருத்துக்கணிப்பின் தரவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான விசேட சந்திப்பின்போது சீன துணை அமைச்சர் சன் ஹையன் தெரியப்படுத்தியுள்ளார். அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பன தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள சீன இராஜதந்திர மையம் ஆய்வு அறிக்கைகளை ஏற்கனவே பீஜிங்குக்கு அனுப்பியிருந்தது.
இவற்றை முழுமையாக அவதானத்த பின்னரே சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழுவினர் கொழும்பு வந்தனர். ஆனால், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த தகவல்களை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ள தீர்மானித்திருந்தனர். இதன்படி, கருத்து கணிப்பு ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்தக் கருத்துக் கணிப்பு மிக இரகசியமாக கம்பஹா – பியகம தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் நடந்த சஜித் தரப்புடனான சந்திப்பில் கருத்துக் கணிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.