நானுஓயா கிரிமிட்டியில் இலவச அரிசி விநியோகம்.
டி.சந்ரு செ.திவாகரன்
அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு நாடுபூராகவும் நடைபெறுகின்றது.
இதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்கு கீழ் இயங்கும் 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இன்று (02) விநியோகம் செய்யப்பட்டது .
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி விநியோகத் திட்டத்தின் கீழேயே நானுஓயா கிரிமிட்டியிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இலவச அரிசி விநியோகம் நுவரெலியாவில் சில பிரிவு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுகளுக்கு தொடராக அரிசி விநியோகம் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.