அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.

நானுஓயா நிருபர்

நுவரெலியா மார்கார்ஸ் தோட்டம் கீழ் பிரிவைச் சேர்ந்த கிட்ணன் ரவிச்சந்திரன் அகில இலங்கை சமாதான நீதவானாக நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் என்.டபிள்யூ.கே.எல் பிரபுத்திகா லங்காணி முன்னிலையில் (02) வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரஜா பொலிஸ் ரூவான்எலிய கிராம பிரிவு உப தலைவராகவும் , நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் இயங்கும் அறநெறி பாடசாலையின் தலைவராகவும் , பிரதேசத்தில் சமூக கலாசார அமைப்பு அதன் நிர்வாக சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன், பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.