பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: மதரசா இடிப்பு
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மதரஸாவை அசாம் போலீசார் இடித்து தள்ளினர். பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஏ.க்யூ.ஐ.எஸ்., எனப்படும் இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா மற்றும் ‘அன்சருள் பங்ளா டீம்’ என்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 37 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், இமாம் மற்றும் மதரஸா ஆசிரியர்களும் அடங்குவார்கள். பயங்கரவாதிகள் சிலர் இங்கு வந்து பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.இ கூறியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் முக்கியமானவரான முஸ்தபா என்பவர் பொங்காய்கான் மாவட்டத்தில் கபய்ட்ராரி கிராமத்தில் நடத்தி வந்த மதரஸாவை போலீசார் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்தனர். இதற்கு பல பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக, அங்கு படித்து வந்த 224 மாணவர்களை போலீசார் மீட்டனர். அசாம் அரசால் இடிக்கப்படும் 3வது மதஸா இதுவாகும்.