volleyball premier league போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரித்தானியாவில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள VPL-UK என்னும் volleyball premier league போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வானது கடந்த மார்ச் 13ம் திகதி புதன்கிழமை அன்று Hayes crystal hall மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் ஏல நிகழ்வானது VPL நிர்வாக குழும அங்கத்தவர்களான திரு.சுரேன்.திரு.சுரேஷ்.திரு.குட்டி. .திரு.வதனன்.திரு.குகன் ஆகியோரின் தலமையில் மங்கள விளக்கேற்றல், மெளனஞ்சலி செலுத்துதல் என்பவற்றோடு ஆரம்பமானது. இதன்பின் போட்டிக்கு பக்கபலமாக விளங்குகின்ற முன்னாள் மற்றும் இந்நாள் அனுசரனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு முதலிலும்பின் போட்டியில் பங்கெடுக்கும் 12 VPL அணிகள் அறிமுகமும் அவ்வணிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கெளரவிப்பும் நடைபெற்றது.
12 அணிகளான , கோல்டன் ஈகிள்ஸ், லண்டன் பயர், ஒஸ்கார் லீமா, ரோமியோ நவம்பர் , வொலிபோல் கிங்ஸ் , யுகே தமிழ் யுனைட்டட் , யுனைட்டட் ரைடர்ஸ் , தாய் மண், இசைத்தமிழ் , பப்பா அல்பா , லியோ , big foot, ஆகிய அணிகள் களமிறங்கவுள்ளன. இவ்வருட 2024 VPL-UK போட்டிக்கான உத்தியோக பூர்வ சீருடையினை குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்ட 6 வீரர்களிற்கு வழங்கி அறிமுகம் செய்யப்பட்டதுடன் இவ் வருட நடுவர்களிற்கான சீருடைபயகளையும் இரண்டு தெரிவுசெய்யப்பட்ட நடுவர்களை கொண்டு அறிமுகமும் செய்யப்பட்டது.அத்துடன் VPL-UK பார்வை என்னும் குறும்பட காட்சியுடன் VPL-UK ன் கடந்து ஆண்டு நிகழ்வு தொகுப்புகளை அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
இறுதியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த VPL-UK 2024 போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.இதில் போட்டியில் பங்கெடுக்கும் 82 வீரர்களின் பெயர்கள் புகைப்படங்களுடன் டிஜிட்டல் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டு 12 அணிகளின் உரிமையாளர்கள் அவர்களிற்கான புள்ளிகளை கேட்டு தங்கள் தங்கள் அணிகளிற்கான வீரர்களை தெரிவுசெய்ததுடன் இவ்வருடத்திற்கான 2024 ன் VPL ஏல நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இவ் நிகழ்வுகளானது VPL UKன் ஊடக அனுசரனையாரான மெய்வெளி தொலைக்காட்சியில் மெய்வெளி இயக்குனர் திரு.சாமின் நெறிப்படுத்தலில் நேரலையாக உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது, இந்நிகழ்வுகளை VPL ன் புகைப்பட அனுசரனையாளரான திரு.பாபாலக்சி புகைப்பட பதிவாக்கம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.