ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி கண்டிப்பாக அறிவிக்கும்-மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச பேசியிருந்தார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் அது எங்களுக்கு சவாலாக இருக்காது.

எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி கண்டிப்பாக அறிவிக்கும்.

கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கண்டிப்பாக ஒரு வேட்பாளரை கட்சி உறுப்பினர்கள் அறிவிப்பார்கள்.

நாங்கள் இன்னும அவர்களை அழைக்கவில்லை. விரைவில் அழைத்து அவர்களுடன் பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்தார்.