வசந்த காலத்தின் உகந்த காலநிலை அடுத்த ஓரிரு தினங்களே நீடிக்கும்

வாரஇறுதி முதல் நாடெங்கும் குளிருடன் மழை பெய்யலாம்

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்
இந்த ஆண்டின் வசந்த காலத்தின் தொடக்க நாளாக மார்ச் 20 ஆம் திகதி புதன்கிழமையை வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் வெளிப்பாகவும் வெப்ப நிலை இதமானதாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிக்குளிர் காலத்துக்குப் பின்னர் தேசிய வெப்பநிலைக் குறிகாட்டி 20°C வெப்பநிலையை நெருங்கும் நாளே வசந்தத்தின் முதல் நாளாகக் (premier jour du printemps) குறிப்பிடப்படுவது வழக்கம். பாரிஸ் உட்பட பல பகுதிகளில் நாளை புதன்கிழமை வெப்பநிலை 20 பாகையை நெருங்கும் ஆயினும் வசந்தத்தின் இதமான நாள்கள் ஓரிரு தினங்களே நீடிக்கும். வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை மீண்டும் குறைவடையலாம் என்று மெத்தியோ பிரான்ஸ் (Météo-France) தெரிவிக்கிறது.
ஆங்கிலக் கால்வாயில் தோன்றும் குழப்பமான காலநிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் சனிக்கிழமை முதல் மழைப் பொழிவை ஏற்படுத்தும். கால்வாயை அண்டிய பகுதிகளில் இடிமுழக்க மழையும் ஏற்படலாம்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 5முதல் 8 பாகை வரை வீழ்ச்சியுறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">