இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த ஆண்டுகளில் வேகமாக வளரும்.
இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளரும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளர் கணித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பான அலுவலகம் பொருளாதாரம் 0.8 வீதம் வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான கணிப்பும் 1.4 வீதத்தில் இருந்து 1.9 வீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் வளர்ச்சியின் திசையே நோக்கி திருப்புவோம்,’ நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மந்தநிலைக்குச் சென்றது. இங்கிலாந்து வங்கி மற்றும் சுயாதீன பொருளாதார வல்லுநர்கள் பலவீனமான வளர்ச்சியைக் கணித்திருந்தனர். இந்நிலையில், இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.