மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக்கொண்டால் பில் கட்ட தேவையில்லை: மகளிர் தினத்தை ஒட்டி தமிழக ஹொட்டல் ஒன்றின் அறிவிப்பு.

மகளிர் தினத்தை ஒட்டி மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக்கொண்டால் பில் கட்ட தேவையில்லை என்று தமிழக ஹொட்டல் ஒன்று அறிவித்துள்ளது.தமிழக மாவட்டமான ஈரோட்டில் உள்ள ஹொட்டல் ஒன்று மாமியார் மற்றும் மருமகள் இடையே ஒற்றுமையை நிலைப்படுத்த புதுவித முயற்சியை முன்னெடுத்துள்ளது.

ஈரோட்டில் உள்ள வேதா ரெஸ்டாரண்ட் அண்ட் கேட்டரிங் என்ற உணவகம் மார்ச் 06 முதல் 18 -ம் திகதி வரை தங்களது உணவகத்திற்கு வரும் மாமியார் மற்றும் மருமகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.அதாவது, தங்களது உணவகத்திற்கு வரும் மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டால் அந்த உணவிற்கான பில்லை கட்ட தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

அவர்கள், ஐஸ்கிரீன், சூப் என்று எது வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்வது மட்டும் தான் நிபந்தனை.இதுகுறித்து உணவகத்தின் வேதா ரெஸ்டாரண்ட் உணவகத்தின் உரிமையாளர் பிரபு கூறுகையில், ‘நாங்கள் 6 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகிறோம். மகளிர் தினத்தை ஒட்டியும், குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் இந்த போட்டியை நடத்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.